Friday 15 November 2013

இது என்ன?

வளமை எனபது என்ன?

உடல் நலம்... இது தான் வளம்..
சிலர் சொல்லினர்.

உள்ளத்தின்  நலம்... இது தான் உண்மையான வளம்..
வாதாடினர் மற்றும் பலர்...

ஆண்டவண் அருள் பெற்று
அவனுக்காய் வாழ்வதே வளம் ...
என்றனர் இன்னும் சிலர்...

மகிழ்ச்சியுடன் வாழ்வதே
மகத்துவமான வளமை
என்றனர் பலர்...

யாருமே சொல்லவில்லை...
இங்கே பணம் தான் வளம் என்று...

யாராவது சொல்வார்களா....?

Saturday 28 September 2013

ஒழிக ஏழ்மை !

தொன்று தொட்டே பலரும் ஏழ்மையினை பாராட்டியே வருகின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் இறைவன் ஏழையின் வீட்டிலே தான் வசிப்பது போல ஓர் மாயையை திட்ட மிட்டே பல தீய சக்திகள் ஏற்படுத்திவிட்டன என்பதை அறிவுசால் பெரியோர் எவரும் மறுப்பதற்கிலர்.

இதனை பாராட்டி எத்தனை எத்தனை கதைகள்... கட்டுரைகள்... புராணங்கள்... சமய பாடல்கள்... திரைப்படங்கள்... அப்பப்பா... பலபல. இப்படிப்பட்ட முட்டால்தனங்கள் கூட தமிழினம் தகுந்த ஆதரவு இல்லாமல், பெரும் முதலாளிகள் இல்லாமல், பொருள்வளம் இல்லாமல்....உலக அளவில் அதிகாரமில்லாமல்   இன்று திண்டாடுவதற்கு மிகப் பிரதான காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

மனப்பாங்கை மாற்றி பொருள் வளம் பெறுவோம். பொருள் பெற்றோர் எல்லாம் அருள் பெற்றோர் இல்லை என்ற பொய்யை நிருபித்து காட்டுவோம்.


Tuesday 24 September 2013

செல்வந்தன்

ஏன் ஒரு மனிதன் செல்வந்தனாகிறான்? - எப்படி ஒரு மனிதன் செல்வந்தனாகிறான்?
ஏன் ஒருவன் செல்வந்தனாகிறான்?